"நெஞ்சு பொறுக்குதில்லையே -
இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்".
நிஜமாகவே நெஞ்சம் பொறுக்குதில்லை. என்னதான் நடக்குது இலங்கை-யில். அதை விட வேடிக்கை தமிழ் நாட்டில் நடப்பதுதான். தங்கபாலு சூளுரைக்கிறார் " இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம், சோனியாவின் படங்களை கொளுத்தினால்". எப்படி இருக்கிறது கதை? அது சரி மானம் கெட்ட தமிழ்நாடு காங்கிரஸ்க்கு தமிழன் கொளுத்தப்பட்டால் கவலை இல்லை.. ஆனால் அன்னை சோனியாஜி புகை படம் முக்கியம். அவர்களை பொறுத்த வரை புலி எதிர்ப்பு முக்கியம்.
காங்கிரஸ் -இ பொறுத்தவரை புலிகள் வேறு, ஸ்ரீலங்கா தமிழன் வேறு. புலிகள் தமிழனே இல்லை. ஸ்ரீலங்கா தமிழ் மக்களுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.. இதைவிட பெரிய காமெடி இந்த உலகத்தில் இல்லை.. இதை சொல்லும் எவனும் ஒரு தடவை கூட அகதி முகம் பக்கம் தலை வச்சு படுத்து இருக்க மாட்டன். அது திறந்தவெளி சிறை தவிர வேறு ஒன்றும் இல்லை. என்ன ஒரே ஒரு வித்தியாசம். ஸ்ரீலங்கா ஆர்மி விட்டு வச்சு இருந்தா பிள்ளை குட்டி உடன் இருக்கலாம். தப்பி தவறி கூட வெளியில் வந்து விட கூடாது. அப்படி வந்திட்டா நீ விடுதலை புலி. என்ன ஒரு கண்டு புடிப்பு. இந்தியா துணை கண்டதை சுத்தி பாகிஸ்தான், நேபால்,சீனா, பர்மா, பங்களாதேஷ் என ஏகப்பட்ட நாடுகள். enguம aகதி முகாம் இல்லை. அப்படி என்றால் அந்த நாடுகளில் இருந்து எவரும் இந்தியா உள்ளே வருவது இல்லையா?. விபசாரத்துக்கு பங்களாதேஷ், நேபால் -ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எல்லை தாண்டும் மக்களின் அளவுக்கு கணக்கு எதுவும் இல்லை. கண்டு கொள்ள படுவது இல்லை.
எனக்கு ஒன்று மட்டும் விளங்க வில்லை. எங்கே போனார்கள் ஹிந்து மத காப்பாளர்கள்?. புத்த மதத்தை சேர்ந்தவன் என்பதுக்காக சீனா-வும், ஜப்பான் -உம் ஸ்ரீலங்கா அரசை ஆதரிக்கிறது. அப்படி எனில் தமிழன் ஹிந்து இல்லையா? எனில் அவன் தனி ஒரு மதமா?.
இதை எல்லாம் சொன்னால் அவன் இந்தியா இறையாண்மை -க்கு எதிரானவன். இந்தியா அரசுக்கு என்னை பொறுத்தவரை "இறை" தன்மையும் இல்லை, ஆண்மையும் இல்லை.
இது இப்படி இருக்க , தமிழ்நாட்டு கருணாவின் ( ஆம். கருணாநிதி தான்) பேச்சு வேறு என்னை மேலும் கடுப்பு அடைய செய்கிறது. ஸ்ரீலங்கா தமிழருகாக இரண்டு முறை ஆட்சி-யை தியாகம் செய்தாராம். நான் சென்ற மாதம் வரை தி.மு.க. ஆதரவாளன் . அவர் ஒன்றும் தியாகம் செய்ய வில்லை. விடுதலி புலிகளை காரணம் காட்டி அவரிடம் இருந்து ஆட்சி புடுங்கப்பட்டது என்பதே உண்மை.
ஜெயலலிதா பற்றி நாம் சொல்லவே தேவை இல்லை. அந்த அம்மணிக்கு சசிகலா நல்ல இருந்தாலே போதும். எவன் செத்தால் அவளுக்கு என்ன?
அய்யா ராமதாஸ் தைலாபுரத்தில் உக்கார்ந்து கொண்டு தனி கதை சொல்லுகிறார். அன்புமணி ராமதாஸ் என்ன பண்ணுகிறார்? மத்திய அரசு நடவடிக்கை புடிக்கவில்லை எனில் பதவி விலக வேண்டியதுதானே?
காணாமல் போனவர்கள் பட்டியல் அதிகம். எனக்கு தெரிஞ்சு எதையும் எதிர் பார்க்காமல் போராட்டம் செய்து கொண்டு இருப்பவர் இரண்டு பேர் மட்டுமே. ஒன்று நெடுமாறன் , மற்றொருவர் சீமான்.
சீமான் நிலை என்ன ஆக கூடும்? தமிழ்நாட்டு காவல் துறை அவர் மீது மேலும் மேலும் வழக்குகள் போட்டு அலைகழிக்க கூடும். வேலூர்-ல் ஒரு வழக்கு. பாண்டி-ல ஒரு வழக்கு என திசைக்கு ஒரு நாள் என "வாய்தா" போட கூடும்.
வேற என்ன சொல்ல.. இந்தியன்-ன்னு சொல்லவே வெக்கமா இருக்கு. என்னோட கையாலாகாத தனத்தை நினைத்து வெக்க பட மட்டுமே முடியுது..
3 comments:
எந்த ஒரு காரணமுமே இல்லாது.. பெரியார் அவர்களை எப்படி எதிர்த்தாங்களோ.. அதே மாதிரி.. கங்கணம் கட்டிக்கொண்டு சீமான் உள்ளே போக வேண்டும் என்பதில் மிகவும் குறியாக இருக்கிறார்கள் இந்த ஜாதீய ஓநாய்கள்.. !
Hi Mahes!
நீங்க மட்டுமில்லை மகேஸ். பாலிடிக்ஸ் பண்ணாத பாமரன் எல்லாரும் அப்படித்தான் தலை குனியரதா இருக்கு. தியாகம்னா என்னங்க. யாருக்காக பண்ணமோ அவங்களுக்கு அதனால ஏதோ ஒரு விதத்தில நல்லது நடந்திருக்கணுமா இல்லையா? 2 வாட்டி ஆட்சி தியாகம். ஈழத்தமிழருக்குன்னு அவர் சொல்லுறாரு. நமக்கு தெரியும் புலிகளை காரணம் காட்டி தான் கவிழ்த்தது. அவங்க வார்த்தைப்படியே அப்படின்னா ஈழத்தமிழர் புலினு பேதமில்லைன்னு மத்திய அரசே சொன்னா மாதிரி தானே. அப்புறம் ஏன் குழம்பறாரு. இந்த ஜிகிடி வேலை எங்க கொண்டு போய் விடுமோ பார்க்கலாம்.
மஹேஸ். அச்சம் அச்சாம் ஆயிட்டுது தலைப்பில. பாருங்கோ.
கருத்துரையிடுக