WEB BLOG
this site the web

என்ன செய்ய வேண்டும் நாம்?

நான் எதிர்பார்த்து போலவே நடந்து விட்டது. இந்தியா பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடை பெறவுள்ளது. தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவுக்கும் தமிழ்நாட்டு கருணாவுக்கும் ஈழ தமிழர் பிரச்சனை நினைவு வந்து இருக்கிறது. வாக்காளர்கள் வழக்கம் போல் பண மழையை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். சீமானையும் அரசியலுக்குள் இழுக்க சிலர் முயற்சிப்பதாக தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் ஈழ தமிழர் பிரச்சனை மறக்கடிக்க பட்டு விடும் அல்லது மறக்கப்படும்.

புலி எதிர்பாளர்கள் தங்கள் மன நிலையை மாற்றிகொள்வது நல்லது. விடுதலை புலிகளின் ஈழத்தில் என்ன குறை கண்டீர் நீங்கள் ? எனக்கு தெரிந்த வரை சட்டம் ஒழுங்கு நேர்த்தியாக இருந்தது. காவல் நிலையத்தில் கன்னி பெண்கள் கற்பழிக்க படவில்லை. காவலர்கள் அங்கே சீருடை இல்லாமல் வந்து ஆள் கடத்தலில் ஈடு படவில்லை. வழக்காடு மன்றங்களில் முட்டைகள் வீசப்படவில்லை. வங்கிகள் செயல் பாடு திருப்தி கரமாக இருந்தது. ட்சுனாமி கோர தாண்டவத்தின் பொது ஈழ காவல் படையின் பணி சிறப்பாகவே இருந்து இருக்கிறது. கொள்கை, அமைச்சு, படை வேறு என்ன வேண்டும் ஒரு அரசாங்கம் நடத்த. ஒரு நாடு முழுமை அடைய.

என்னை பொறுத்தவரை இது ஈழம் என்கிற நாட்டின் மீது, ஸ்ரீலங்கா என்னும் நாடு தொடுத்து இருக்கும் வம்பு போர் இது. ஈழத்தின் தூதரகம் எந்த ஒரு அண்டை நாட்டிலும் இல்லை என்பதை தவிர ஒரு தனி நாட்டுக்கு உரிய எல்லா அம்சமும் ஈழத்துக்கு இருந்து இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை விட ஈழ அரசு நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு வழங்கி இருக்கிறது.

பாரதிதாசன் சொன்னது போல் " சுக்கா மிளகா சுதந்திரம்?". யார் அவன் நமக்கு சுதந்திரம் கொடுக்க? நாம் ஒன்றும் அவனிடம் பிச்சை எடுக்க தேவை இல்லை. என்னை பொறுத்த வரை ஈழம் என்றோ மலர்ந்து விட்டது.

நம்முடைய இன்றைய தேவை என்ன? எதாவது ஒரு நாடு நம்மை அங்கீகரிக்க வேண்டும். கண்டிப்பாக அது இந்தியா-ஆக இருக்க போவதில்லை. அதற்கான ஆவணங்களை செய்யும் என் சொந்தங்களே. நாளை மலர போவதில்லை நமது ஈழம். அது மலர்ந்து நாட்கள் பல ஆகிவிட்டது. நமது பொறுப்பு அதை கட்டி காப்பதுவும் அதற்கான அங்கிகாரம் பெற்று தருவதும் ஆகும்.

நமக்கென ஒரு நாடு .அங்கு தமிழ் ஆட்சி மொழி. கேட்கவே சந்தோசமாக இல்லை?..... ஈழ தமிழ் நாட்டில் நானும் ஒரு விருந்தாளியாக சென்று வரும் நாளை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். கருணாவை சிறையில் சந்திக்க விரும்புகிறேன் உயிரோடு இருந்தால்!!!!.

3 comments:

vasu balaji சொன்னது…

சரியாய்ச் சொன்னீர்கள் மகேஸ். இந்தியாவின் அங்கீகாரம் இல்லாமல் போனால் ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு அங்கீகரிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை. அப்படி மட்டும் நடக்குமேயானால் தமிழினத் தலைவரின் கடைசித் துரோகமாய் என்றென்றுமொரு தலைகுனிவாய் அமைந்துவிடும். போர்முனைத் திறன் மட்டுமே இல்லை வெளியுறவில் கடந்த இரண்டு நாட்களில் அவர்களின் முன்னெடுப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.

vasu balaji சொன்னது…

அதென்னமோ கருணா என்ற பெயரிருந்தாலே துரோகம் என்று தான் பொருள் போலும்.

கலகலப்ரியா சொன்னது…

:).. nanre solli irukkinga..!

கருத்துரையிடுக

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies