"ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு என்ன உதவி செய்திட முடியும் "என்று சொன்னராம் பெரியார் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு உதவிட கூறி வந்த அமிர்தலிங்கத்திடம். என்னோவொரு சத்யமான உண்மை.? பல ஆயிர கணக்கானமக்கள் வெறும் இருபது முன்று சதுர கிலோ மீற்றுக்குள் சுருங்கி உணவுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் எதிர் பார்த்து கிடக்கையில், வெறும் கையை பிசைந்து கிடக்கும் எங்களின் நிலையை விளக்க இதைவிட ஒரு விளக்கம் தேவை இல்லை. இதற்கு மேலே சொன்னால் நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவன் ஆகி விட கூடும்.
நேற்று முன்தினம் இந்தியராணுவத்தில் பணிபுரியும் என்னுடைய நண்பன் ஒருவன் பேசிக்கொண்டு இருக்கையில், அவன் சொன்ன செய்தி என்னை மேலும் கவலைக்கு உள்ளாகியது. இந்திய ராணுவ வீரர்கள் இலங்கையில் சண்டை இடுவது உண்மை என்றும் , அந்த படையில் ஒரு தெனிந்தியா வீரன் கூட இடம் பெறாமல் மிகவும் கவனமாக தேர்வு செய்து உள்ளதும் தெரிய வந்து உள்ளது. புலிகளின் ஒவ்வொரு அசைவும் ஆளில்லா விமானகள் மூலம் கண்காணிக்க படுவதாகவும் தெரிகிறது. பொன்சோக தந்து உள்ள அறிக்கையில் சொல்லி இருக்கிறான் " தமிழ் ஈழ கனவு பலிக்க போவது இல்லை. புலிகள் முற்றோடு அளிக்க படுவார்கள். எங்களிடம் வரும் தமிழக மக்களுக்கு அன்பும், அரவணைப்பும் உண்டு என்று". அந்த அன்பும் அரவணைப்பும் வேறு ஒன்றும் இல்லை பட்டினி சாவுகளும், சித்திரைவதைகளுமே தவிர வேறு ஒன்றும் இல்லை. சிங்கம் சைவம் ஆகி விட்டது என்று சொன்னால் யார் நம்புவர்?
இலங்கைக்கு ராணுவ உதவி செய்யும் இந்தியாவின் நோக்கம் எதுவாக இருக்க கூடும்?
ராஜிவின் கொலைக்கு பழி தீர்த்தல் மற்றும் மால்தீவை போல சிறிலங்காவையும் தனது கட்டுக்குள் இதன் மூலம் கொண்டுவந்து, இந்த பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட. இதை அறிந்துதான் பல சிங்கள அமைப்புகள் இன்னும் இந்தியாவை எதிர்த்து தொடர்ந்து கூச்சல் போடுகின்றது.
இந்தியாவின் ஆசைகளுக்கு தமிழ் இனம் இங்கே பலி கடா ஆக்கப்பட்டு இருப்பதுதான் வேதனை அளிக்க கூடிய விஷயம். அங்கே எவன் செத்தாலும் கவலை இல்லை. நான் ஊகித்தவரையில் மேலே சொன்ன விஷயங்கள் எல்லாம் சர்க்கரை தடவி தமிழக தலைவர்களுக்கு கீழ் கண்டவாறு சொல்ல பட்டு இருக்கலாம்.
இந்த போரின் பின் முற்றாக புலிகளின் ஆதிக்கம் அளிக்க பட்டு விடும்,
அதன் பின் இலங்கை இந்தியா சொன்ன படி ஆட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ள பட்டுவிடும். பிறகு தமிழர்களுக்கு சுய ஆட்சி அல்லது சம உரிமை வாங்கி தருவதில் எந்த இடயுரும் இருக்க போவது இல்லை.
புலிகள் அந்த பிரதேசத்தில் இருக்கும் வரை இது நடக்க போவதும் இல்லை.
கடந்த சில மாதங்களாக கருணாநிதியும், தமிழக காங்கிரஸ் அமைச்சர்களும் விடும் அறிக்கைகளை கூர்ந்து கவனித்தால் இது விளங்க கூடும்.
எது எப்படி ஆகினும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் முடிவு தெரிந்து விட கூடும். பொறுத்து இருந்து பார்ப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.
நானும் ஒரு அடிமை......
Posted by
Maheswaran Nallasamy
, புதன், 15 ஏப்ரல், 2009 at 2:11 AM, in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
aathikkam alikkappattuvidum enra antha eluththup pizhai.. balikkattum!
இதிலிருந்து உலக அமைப்புகள் எல்லாம் ஏதோ மனமகிழ் மன்றம் போலத்தான் தோன்றுகிறது. ஏனோ தானோ அறிக்கைகள், எழுதி வைத்த விசனங்கள், யதார்த்தத்துக்கு புறம்பான கருத்துக்கள் என்ற அளவிலேயே இருக்கின்றன. கலைஞர் வசனங்களோ நம்மை எல்லாம் இளிச்ச வாயர்களை விட கேவலமாகக் கருதுவதைத் தான் காட்டுகிறது. சொன்னாற்போல் அடிமையின் அடிமைகள் தாமே நாம். பொறுத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.
கருத்துரையிடுக