திரைப்பட நடிகர் சத்யராஜ் தமிழக மக்களின் பங்களிப்பு ஈழ தமிழ் பிரச்சினையில் வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது என்றும், பக்கத்து வீடு பற்றி எரியும் வேலையில் நாம் இப்படி சும்மா இருப்பது கூடாது என்றும் கொந்தளிக்கிறார். அட போங்கயா... இவர் என்ன புரியாத ஆளாக இருக்கிறார் ?. தமிழன் என்ன மானமுள்ள ரோசமுள்ள சீக்கியனா?. உணர்வுகள் துரு புடித்து ஆண்டுகள் பல ஆகி விட்டது. தற்போதைய தமிழனின் தலையாய கடமைகள்,
அரசு கொடுத்த இலவச தொலை காட்சி பெட்டிகளில் மானாட மார்பாட , மன்னிக்கவும் மானாட மயிலாட போன்ற கருத்தாழம் மிக்க நடன நிகழ்ச்சிகளிலும் , காலை முதல் மாலை வரை அழுது தொலைக்கும் நெடுந்தொடர்களிலும் ( நிகழ்ச்சிகள் தமிழாக்கம் : தமிழின காவலர் கலைஞர் ) கவனம் செலுத்துவது. இத்தகைய தொலை காட்சி நெடுந்தொடர் ஒன்றில் கூட ஒருவனுக்கு ஒரு மனைவியோ, ஒருத்திக்கு ஒரு கணவனோ இல்லை என்பது கூடுதல் அம்சம்.
காசு வாங்கி கொண்டு கள்ள ஒட்டு முதல் நல்ல ஒட்டு வரை போட்டு முடிந்தவரை ஜனநாயகத்தை காப்பாற்ற முயல்வது.
தலைவன் நடித்த திரை படம் வெளி வந்தால் தோரணம் கட்டி பீர் நீராட்டு, பால் நீராட்டு, கற்புரம் காட்டி வழிபாடு செய்வது போன்ற பல புண்ணிய காரியங்கள் செய்வது மற்றும் அதற்காக தலைமை மன்றத்துக்கு மனு போட்டு பதிவு செய்து கொள்வது. (உதாரணம் : பலான பலான ரசிகர் மன்றம் , பதிவு எண : 45௬௭ / ௯௬). கொஞ்ச நாட்கள் கழித்து தலைவர் அரசியலுக்கு வர வேண்டுமென்று இதே ரசிகர் மன்றத்தில் தீர்மானம் போடுவது, சித்திரை திருவிழாவை முன்னிட்டு காசு வசூல் பண்ணி பக்தர்களை வரவேற்று ரசிகர் மன்றம் சார்பில் போஸ்டர் ஓட்டுவது, அம்மனுக்கு கூழ் ஊற்றுவது இவையெல்லாம் முக்கிய கடமைகள்.
இவ்வளவு பணிகளுக்கு இடையில் ஈழ தமிழர் பற்றி நினைக்க அவனுக்கு நேரம் எப்படி கிடைக்க அவன் என்ன கலைஞரா?
எவன் எக்கேடு கேட்டு போனால் எனக்கு என்ன?. மானமுள்ள தமிழன் ஒன்று தீ குளித்து மாண்டு போகிறான் அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி சிறைக்கு போகிறான். பாதி தமிழன் தமிழ் நாளேடுகளை பார்ப்பதே இல்லை (தமிழ் நாளேடு படிப்பது இழுக்கு) அல்லது
நாளேடு பார்க்கும் பழக்கமே இல்லை.
வழக்கு அறிஞர்கள் மட்டும் விடாது இந்த பிரச்சினை பற்றி போராட்டம் நடத்தி கொண்டு இருந்தனர். தமிழின காவலர் அய்யா கலைஞர் அவர்களால் அதுவும் திசை மாற்றப்பட்டு விட்டது. எதை வைத்து கொண்டு நாம் இதை தாய் தமிழகம் என்று சொல்லுகிறோம் என்பது மட்டும் புரியவில்லை. வேண்டுமானால் மாற்றான் தாய் தமிழகம் எனலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
தமிழ் நாளேடு படித்தால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது. ஆளும் கட்சி, அதன் தோழமைக் கட்சி ஏதாவது முனகினால் தமிழர் சாவு வரும். ஒரு மூலையில். மற்ற நாட்களில் இலங்கை அரசின் சாதனைகள் தாமே? தலைவரின் கேள்வி பதில் பக்கம் பக்கமாக. தொலைக் காட்சியில் எப்போதாவது அத்தி பூத்தாற் போல் வரும் கருத்துப் பறிமாற்றம் கூட உண்மை பிரச்சனையோ தீர்வோ விவாதிப்பதை விட கை காலைக் கட்டிக்கொண்டு சுதந்திரமாக இருக்க வழி சொல்பவை. இப்படி நாமே புலம்பி, சீறி, முடங்கிப் போவது தான் யதார்த்தம்.தாய் என்றாலே அது மாற்றாந் தாயானால் கூட ஏதோ ஒரு துளி தாய்மை இருக்கும். தாய் தமிழகம் என்று சொல்லியே தீரவேண்டுமென்றால் கூட இது ஒவ்வாது. அவ்வளவு மோசமாக இருக்கிறோம்.
ம்ம்.. கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது.. அப்டியே தமிழ்மணத்தில இணையுங்கோ சார்..!
கருத்துரையிடுக