இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண கூறி மீண்டும் ஒருவர் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இருக்கிறார். நினைத்தாலே பெரும் துன்பத்தை தருவதாக இருக்கிறது.
அவருக்கு இரண்டு வயதுக்கும் குறைவான வயதுடைய மகனும், இளம் மனைவியும் இருப்பது தெரிய வந்துள்ளது. எனக்கு இந்த மாதிரியான தற்கொலை முயற்சிகளில் உடன்பாடு இல்லை. தமிழன் தற்கொலை பண்ணி கொள்ளவா பிறந்தான்?. முடிந்தால் இரண்டு எதிரியின் உயிரை எடு.
"பிறந்த குழந்தை இறந்து பிறந்தால், வாளால் கீறி புதைப்போம் " - என சும்மா பாடி கொண்டு இருந்தால் போதாது.
அங்கே தமிழச்சிகள் நூற்று கணக்கில் தாலி அறுத்து கொண்டு இருக்கையில், ஜெயலலிதா அம்மணி அவரது அறுபது ஒன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய கட்சி தொண்டரடி ஆழ்வார்கள் ஏற்பாடு செய்த விழாவில் அறுபத்தி ஒன்று ஜோடி -க்கு திருமணம் செய்து வைக்கிறார். நாடு எப்படி நாசமாக போனால் என்ன?
இந்த காமெடி-க்கு இடையில் , இலங்கை தமிழர் நல உரிமை (?) அமைப்பு, சோனியா காந்தியை சந்தித்து மூன்று கோரிக்கைகளை வைத்து உள்ளது.
ஒன்று : பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிங்கள மக்களுக்கு இணையான அந்தஸ்து அளிக்க பட வேண்டும. அதுக்கு சோனியா இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
இரண்டு :ஐ.நா. படையை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் ( இவங்க போனது போதவில்லை என நினைக்கிறேன்)
மூன்று : இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் ( ஆயுத தடை பற்றி கவலை இல்லை)
பொறுங்கள் இனிமேல்தான் காமெடி ஆரம்பிக்கிறது. சோனியாவின் பதில் என்ன தெரியுமா? இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலை இடாது. எனவே இது பற்றி பிரணாப் -எடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எப்படி போகிறது கதை.
http://www.nitharsanam.com/?art=27241
http://www.nitharsanam.com/?art=27232
http://www.nitharsanam.com/?art=27240
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: அரங்கேறும் நகை சுவை நாடகங்கள்.
Posted by
Maheswaran Nallasamy
, வியாழன், 19 பிப்ரவரி, 2009 at 1:07 AM, in
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 comments:
நீங்க வேற மகேஸ். எரிஞ்சாலும் தலைவருக்கு கவலை இல்லை.எத்தனை பேர் செத்தாலும் கவலை இல்லை. சுவாமி மேல முட்ட அடிச்சதுக்கு படற வேதனை சொல்லி மாளாது. சொறிய சோ இருக்கறப்போ அம்மாக்கு என்ன கவலை? ஆனாலும் இவ்ளோ விவரமில்லாமலா இருப்பாங்க. சோனியா கச்சி தலைவி. ஆப்பு அரச தலைவர். யார என்ன கேக்கணும்னு தெரிய வேணாமா. உள் விவாகாரங்களில் தலை இடாதுன்னா இங்க இருக்கற புண்ணாக்குங்க ராஜீவ கொன்னதால புலிகளுக்கு ஆதரவில்லைன்னு உளருதே. இருந்திருந்தா இறையாண்மைன்னெல்லாம் பார்க்க வேணாம்ல. இவனுவள்ளாம் ஆளாளுக்கு பேசி ஒரு வழியா ஒரு உருப்படாத வழி சொல்றதுக்குள்ள அங்க ஏதாவது மிஞ்சுமா தெரியலை.
கருத்துரையிடுக