அண்மையில் நான் வலைமனையில் பார்த்த புகைப்படம் ஒன்று எனது இரவு தூக்கத்தை
தொலைக்க காரணமாக அமைந்துவிட்டது. கீழே ஒரு குழந்தை இறந்து கிடக்க, கூப்பாடு போட்டு அழுகிறாள் தாய். மடியில் மற்றொரு குழந்தை முளை காம்பில் வாய் வைத்து சப்பிகொண்டு இருக்கும் காட்சி அது. எவ்வளவு கொடுரங்களை அந்த குழந்தை பார்த்து இருந்தால், தாய் அழும்
வேளையிலும் பாலுக்காக முலைகாம்பை தேட முடியும?
இதோ எனது எல்லையிலிருந்து வெறும் ஐம்பதுகிலோ மீட்டர்-க்கும் குறைவான தூரத்தில் எனது பாட்டனும், பூட்டனும்இருந்த தேசத்தில் எனது உறவுகள் கஞ்சிக்காக அலையும் வேலையில் காண சகிக்க வில்லை. எவ்வளவு நாள் தொடரும் இந்த அவலம்? என்ன இந்த குழந்தைகளின் எதிர்காலம்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
இதெல்லாம் நமக்குதான் தெரிகிறதா. கூச்சமில்லாமல் மத்திய அரசு எவ்வளவு பிடுங்கி இருக்குன்னு சொல்கிற முதலமைச்சருக்கு காட்ட மாட்டாங்களோ. அதிர்ச்சி தாங்காம ஏதாவது ஆயிடும்னு. நாளபின்ன இந்த பிள்ளைகள்ள ஒன்ன பார்க்க நேர்ந்து, அது சிரிச்சிகிட்டே யாரோ சொன்னாங்க. நீங்க அப்போவே ஏதொ பண்ணி இருந்தா எங்களுக்கு இப்படி எல்லாம் ஆயிருக்காதாமே. நிஜமான்னா அங்கயே செத்துட்டா நல்லா இருக்கும்.
:)
கருத்துரையிடுக