ஒரு சிலையும் உறை சிறையும்!!!
Posted by
Maheswaran Nallasamy
, சனி, 1 ஆகஸ்ட், 2009 at 2:59 AM, in
பெங்களூருவில் சுமார் பதினெட்டு ஆண்டுகள் மூடி வைக்கப்பட்டு இருக்கும் திருவள்ளுவர் சிலை அடுத்த மாதம், கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. - செய்தி.
"தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை." -திருவள்ளுவர்.
தமிழின காவலர் கலைஞருக்கு பெங்களூர்-ல் வசிக்கும் அவரது அருமை மகள் செல்வி நினைவு வந்து இருக்க கூடும். கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது "சந்தன" புகழ் வீரப்பனால் தனது கோரிக்கைகளில் ஒன்றாக வைக்கப்பட்ட இந்த வள்ளுவரின் சிறை மன்னிக்கவும் சிலை திறப்பு விழா, பெங்களூர் தமிழ் மக்களால் பலமுறை முயற்சி செய்தும் முடியாத நிலையில் தமிழரின் நலனுக்காகவும், தமிழுக்காகவும் தன்னை அர்ப்பணித்து கொண்ட (?), கலைஞர் அவர்களால் திறக்கப்படவிருக்கிறது. ஒரு வாரம் மகள் வீட்டில் ஓய்வு எடுத்த பின் விமான நிலையம் செல்லும் வழியில் இந்த சிலை திறப்பு விழா நடக்கவிருக்கிறது.
சிலை திறப்புக்கு பின் என்ன ஆகும்?:
இதுவரை காக்கை, குருவிகளின் கழிவுகளை தாங்கி வந்த சாக்கு அகற்றபடவிருப்பதால், இனி வள்ளுவர் தலை இனிமேல் அந்த பணியை சிரமேற்கொண்டு செய்ய தொடங்கும்.
அந்த இடத்தில இனி காவல் காக்க வேண்டிய அவசியம் (யாரும் சிலையை திறந்து விடாமல்(?)) பெங்களூர் காவல் துறைக்கு இல்லை.
பெங்களூர் தமிழ் சங்கத்துக்கு ரூபாய் ஐந்து லட்சம் வளர்ச்சி நிதியாக கிடைக்கும். அந்த நிதி இதே போல் கலைஞர் சிலை அமைக்க உதவும்(வேற எதுக்கு இந்த ஐந்து லட்சம்?).
இனி காவிரியில் தண்ணீர் கேட்டால் வாட்டால் நாகராஜன் கும்பல் சாணி அடிக்க இந்த சிலை உதவ கூடும்.கழக திமுக அரசின் சாதனையாக கலைஞர் அவர்களால் சட்ட சபையில் அறிவிக்க பயன்பட கூடும்.
என்ன கொடுமை சார் இது???. இதுக்கு அந்த சிலையே வைக்காமல் இருந்து இருக்கலாம். இதை விட வள்ளுவரை கேவல படுத்த முடியுமா என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
/இதை விட வள்ளுவரை கேவல படுத்த முடியுமா என்ன?/
உக்காந்து யோசிப்பாங்க.
வழக்கம்போல் நல்ல கருத்துக்கள்.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை வைப்பது தேவையில்லாத வேலை. இதையே சாக்காக வைத்து வடல் நாகராஜ் போன்ற ஆட்கள் போராட்டம் செய்து, அப்பாவி பெங்களூர் தமிழர்களை அடித்து நொறுக்குவார்கள்.
Can you pls take off word verification?
கருத்துரையிடுக