WEB BLOG
this site the web

மைனாவே.. மைனாவே!!!!

மைனா சந்தோசமாக இருந்தான்..தலையில் எண்ணெய் தேய்த்து அழுத்தி வாரி இருந்தான். அடிக்கடி அவனும் அவன் அய்யாவும் நின்று இருந்த வரிசையை பார்த்து கொண்டு இருந்தான். அவன் நின்று இருந்த சற்று தூரத்துக்கு முன்னே சுரேஷும், வேலுவும் நின்று கொண்டு இருந்தார்கள்.

"என்னபா நீயும் பயல பள்ளிக்கூடத்தில சேர்க்க வந்திய என்ன"? - சுரேஷன் அப்பா கேட்டார்.

"ஆமாப்பா. நேத்து இருந்து தூங்க விட மாட்டேங்கிறான். இன்னும் நாள் கிடக்குடா- ன்னு சொன்ன கேட்டாதானே" என அலுத்துகொண்டார்.

மைனாவின் சந்தோஷத்திற்கான காரணமும் இருந்தது.அது அந்த கிராமத்தின் ஆரம்ப பள்ளிக்கூடம். முதலாம் வகுப்பு சேர்க்கை நடந்து கொண்டு இருந்தது. ஜூன் மாதத்தின் வாடை காற்று ஒரு விதமான சிலிர்ப்பை தந்தது.

"அய்யா.."

"என்னடா"

முந்தய நாள் இரவின் தூக்கமின்மை குரலில் தெரிந்தது. கண்கள் சிவப்பேறி கிடந்தது.

"அப்போ இன்னைல இருந்து நான் ஒன்னாப்பு இல்ல.பெரிய பையன் ஆயீடன் இல்ல"

"ஆமாடா அதுக்குதானே வந்து இருகோம்"

"அப்போ அரை கிளாஸ் போக வேணாம் இல்ல"

"ஆமாடா ...இத எத்தனை தடவை கேப்ப"

"அப்புறம் ஏன் சுரேஷு அழுவுறான்?.படிக்கட்டு வச்ச பள்ளிகொடம் தானே போக போறோம்?"

"அந்த பயபுள்ளைக்கு பள்ளிகொடம்-னாலே கசப்புதான்..நீ சும்மா இருடா".

"அரை கிளாஸ்" கட்டிடம் தொடக்க பள்ளியின் கட்டிடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்தது. "அரை கிளாஸ்" என்று அழைக்கப்படும் அந்த பால்வாடியில் நான்கு படிகள் ஏறியதும் வகுப்பு அறை வந்துவிடும். இருப்பது ஒரே ஒரு அறைதான். பெஞ்சுகள் கிடையாது. எல்லாம் தரை வாசம்தான். பிள்ளைகளை கூட்டி கொண்டு வர, கொண்டு சென்று விட ஒரே ஒரு ஆயா. "கோண கோண புளியங்கா .. கொம்ப சுத்தி புளியங்கா" ..என சொல்லி தரவும், பிள்ளைகளை தூங்க வைக்கவும் ஒரே ஒரு டீச்சர். நான்கே படிகள் கொண்ட பள்ளியில் படிப்பது மைனாவுக்கு ஒரு பெரிய கவுரவ பிரச்சினயாக இருந்தது.

பதினாறு படிகள் கொண்டது ஆரம்ப பள்ளி கூடம்.மைனாவுக்கு அந்த பள்ளியின் மேல் ஒரு பிரியம் இருந்தது. உள்ளே நுழைந்ததும் இரண்டு புறமும் வகுப்பு அறைகள். இருபுற சுவர்களில் கரும் பலகைகள். எந்நேரமும் "ஹோ" -வென சத்தமும், ஆசிரியை சொல்ல சொல்ல, பிள்ளைகள் திருப்பி சொல்லும் சத்தமும் நாளை முதல் நாமும் அங்கே வர போகிறோம் என்ற எண்ணமும் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணியது.

உள்ளே தலைமை ஆசிரியரின் அறை பரபரப்பாக இருந்தது. வேலுவும், சுரேஷ்-ம தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியில் வருவதை மைனா கவனித்தான்.

"அய்யா"

"என்னடா ..சும்மா தொண தொண-ன்னுகிட்டு"

" வேலுவும் சுரேஷனும் பள்ளிக்கூடத்தில சேர்ந்து வீட்டுக்கு போய் கிட்டே இருகாங்க. நம்ம சீக்கிரம் வந்து இருக்கலாமில்ல"

"கொஞ்ச நேரம் பொறுடா.. என்ன அவசரம்...நைட் ஷிப்ட் போயிடு வந்த நானே சும்மா இருக்கேன்.. இன்னும் கொஞ்ச பேருதான் இருக்காங்க"

பள்ளி மைதானம் காலியாக இருந்தது. அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு நாவல் மரத்தின் மேல் ஓடியது. அரச மரத்தின் இலைகளின் காற்றில் சலசலத்தன. இரட்டை வேப்ப மரம் வரை நீண்டு இருந்த வரிசை இப்போது படிக்கட்டுகளின் விளிம்பில் இருந்தது.

"அடுத்து யாருப்பா?" என்ற குரல் கேட்டு தலைமை ஆசிரியரின் அறையின் உள்ளே நுழைந்தான் மைனா.

உள்ளே நுழைந்தவுடன் அய்யா வணக்கம் சொல்லிவிட்டு கைகளை கட்டி கொண்டார்.
"உன் பேரு என்ன?" - குரல் வந்த திசையை கவனித்தான்.

கனத்த பெரிய கருப்பான பெரிய உருவம் ஒன்று உள்ளே உக்காந்து இருந்தது.பயத்தில் அவன் வயிற்றில் எதுவோ உருண்டது. சிறு நீர் வந்துவிடும் போல இருந்தது. குரல் மைனாவின் தொண்டையை விட்டு வெளியே வர வில்லை.

"என்ன வயசாகுது ? " - இது அய்யாவை பார்த்து கேட்க பட்ட கேள்வி.

" அஞ்சு நடக்குதுங்க"

"பார்த்த அப்படி தெரியலையே"

"இல்லைங்க சார். நிசம்தான். இதோ பாருங்க ஜாதக புத்தகம்"

"அட அதை நான் நம்புறது இல்லபா. சரி ..அவனை காதை தொட சொல்லு"

வலது கையை எடுத்து உச்சந்தலையை சுற்றி இடது காதை தொட்டு விட்டால் ஐந்து வயதை அடைந்து விட்டதாக அர்த்தம். அது ஒன்றே வயதை நிர்ணயிக்கும் அளவுகோலாக இருந்தது. எனது வலது கையை எடுத்து நானும் காதை தொட மீண்டும் மீண்டும் முயன்றேன். ஊகும்..காது எட்டுவதாக இல்லை.

"நீங்க ஒன்னு பண்ணுங்க ..அடுத்த வருஷம் வாங்க அதுக்குள்ள பைய்யன் வளந்துருவான்" - என்றார்.

"இல்லைங்க.. பைய்யன் பொக்கு-னு போயிருவான். ரெண்டு நாளா இதையே சொல்லிக்கிட்டு கிடந்தான்"

" ஏப்பா .. ஒரு தடவ சொன்ன புரியாதா? அடுத்து ஆளுங்க வெளிய இருக்காங்க பாரு.. அடுத்து யாருப்பா"

மைனா மீண்டும் அரை கிளாஸ்-கே கொண்டு வரப்பட்டான்." போக மாட்டேன்" என அழுத அவன் பக்கத்துக்கு வீடு ஜெயலக்ஷ்மி அங்கே உக்காந்து இருப்பது காண்பிக்க பட்டு மீண்டும் ஒரு வருடம் அங்கே உட்கார வைக்க பட்டான். அடுத்து ஒரு வாரம் சுரேஷ்க்கும், வேலுவிக்கும் காதை தொடாத மைனாவின் தோல்வியும், காதை தொட்ட அவர்களின் வீர பிரதாபங்களும் அவர்களின் பிரதான கதை களமாக இருந்தது. என்னுடன் சேர்ந்து விளையாடலாமா ? இல்லையா என்பது அவர்களால் தினந்தோறும் பொதுக்குழு கூடி முடிவெடுக்க பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வகுப்புகள் பற்றிய கதைகள் சொல்லப்பட்டு, அடுத்த ஆண்டு பாடம் பற்றி இந்த ஆண்டே மிரட்டப்பட்டேன். "காது தொட முடியாதவன் எல்லாம் பேசுறாண்ட டேய்" - என்று கேலி செய்யபட்டு காதை கண்ணாடியில் கூட பார்க்க முடியாத அளவுக்கு வெறுப்பேற்றபட்டான் மைனா.


மைனா பெரிய பள்ளியில் சேர்ந்து ஆண்டு மூன்று முடிந்து பின் அவனுக்கான காலம் வந்தது. இப்போது அவன் மூன்று முடிந்து நான்காம் வகுப்பு.நான்காம் வகுப்பு ஆசிரியர் வந்து தேர்ச்சி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்து தனது வகுப்புக்கு அழைத்து சென்றார். பட்டியலில் பெயர் இல்லாதவர் மீண்டும் அதே வருடம்.. அதே வகுப்பு ..அதே பாடம்..

நான்காம் வகுப்பு கொஞ்சம் பெரியதாக இருந்தது. கடைசி பெஞ்சில் ஓரத்தில் இன்னும் இருவருடன் வேலுவும், சுரேஷ்-ம உக்காந்து இருந்தனர். மைனா ஓடி போய் அவர்களோடு சேர்ந்து கொண்டான்.

"ஏன்டா நீங்க அஞ்சாப்பு போகல?.. ஏன் நாலாப்புல உக்காந்து இருக்கீங்க?" -மைனா

"இல்லடா.. நாங்க என்னவோ நல்லதாம் படிச்சோம். ஆனா அஞ்சாபுல இடமில்ல. அதான் இங்க உக்காந்து இருக்கோம்..அதுக்காக நாங்க பெயில் அயிடோமின்னு நினைக்காதே"

அன்று மாலை இதே கேள்வி அவர்களின் வீட்டில் கேட்கபட்டு, அதே பதில் சொல்லப்பட்டது. நீண்ட நேரம் அங்கே இருந்து அடி விழும் சத்தமும் அழுகை சத்தமும் மாறி மாறி கேட்டு கொண்டே இருந்தது.

7 comments:

vasu balaji சொன்னது…

/எனது வலது கையை எடுத்து நானும் காதை தொட மீண்டும் மீண்டும் முயன்றேன். ஊகும்..காது எட்டுவதாக இல்லை. /

ஆஹா மஹேசு! அருமையா மைனா கதை சொன்னிங்க. இங்க கோட்ட விட்டுட்டீங்களே. நீங்க தானெ அந்த மைனா? சின்ன மைனா எப்படி இருக்கு? :))

கலகலப்ரியா சொன்னது…

//எனது வலது கையை எடுத்து நானும் காதை தொட மீண்டும் மீண்டும் முயன்றேன். ஊகும்..காது எட்டுவதாக இல்லை. //

இப்டி திடுதிப்புன்னு இடைல மைனா மகேஸ் ஆகி.. திரும்ப மகேஸ் மைனா ஆகி.. என்ன? அங்க அங்க எழுத்துப் பிழை.. ஹிஹி.. இத பார்த்தா சுரேஷ் கூட சேர்ந்தே மைனா நடந்திருக்கு போலருக்கே..
அது சரி.. மைனா பேர நீங்க எப்டி திருடலாம்..????????!!!!

Maheswaran Nallasamy சொன்னது…

one more:

ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் வகுப்புகள் பற்றிய கதைகள் சொல்லப்பட்டு, அடுத்த ஆண்டு பாடம் பற்றி இந்த ஆண்டே மிரட்டப்பட்டேன்.


Chinna Maina thollai thanga mudiyala.. Night 12 mani varaikkum thoonga vida mattenguran

vasu balaji சொன்னது…

12 மணிக்கெல்லாம் தூங்கணும்னு நினைச்சது யார் தப்பு?

Maheswaran Nallasamy சொன்னது…

athu sari..athan sari..

கலகலப்ரியா சொன்னது…

naama kelvi keattaa bathil sollaathavanga idugaikkellaam naama inime comment poda mattom..!!! namakkum rosham irukkudiyo..!

Maheswaran Nallasamy சொன்னது…

hahahahah....oru matter ennana innum blog-la naan chinna payyan.

கருத்துரையிடுக

 

W3C Validations

Cum sociis natoque penatibus et magnis dis parturient montes, nascetur ridiculus mus. Morbi dapibus dolor sit amet metus suscipit iaculis. Quisque at nulla eu elit adipiscing tempor.

Usage Policies