மணல் வெளியெங்கும்
காண கிடக்கின்றன
சவ குழிகள்.
வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கிறன
சமாதானத்திற்கான கொடியும்
அதை ஏந்தியவர் கரங்களும்.
புத்தர் மாதிரியொருவர்
போதி மரத்தை
வெட்டி கொண்டிருந்தார்.
தூரத்து பள்ளி கட்டிடமொன்றில்
இடிபாடுகிடையில் இறந்து கிடந்தன
இயல் இசை நாடகம் மூன்றும்.
சவகுழியில் இருந்து மீண்டும்
சத்தம் வரக்கூடுமென
இருவர் பேசி கொண்டனர்.
தூரத்தில் பிணதின்னி கழுகளோடு
பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்தது
என்தேசத்தின் இறையாண்மை
கால்கள் துவள
நடக்கிறேன் நான்.
நீண்டு கொண்டே செல்லும்
பாதை முடிவதாக இல்லை
இறந்து கிடந்த
தாயின் மார்பில் வழிந்த
ரத்தத்தை உறிஞ்சி குடிக்க
தொடங்கியது ஒரு குழந்தை
அலறியபடி கண் விழித்து
எழுந்தேன் நான்
கரடி பொம்மையை கட்டி
படுத்திருந்த என் குழநதை
தூக்கத்தில் சிரிக்க தொடங்கியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 comments:
ம்ம்..
நிஜத்த விட உங்க கனவு.. பயங்கரமா இருக்கு.. !
/புத்தர் மாதிரியொருவர்
போதி மரத்தை
வெட்டி கொண்டிருந்தார்./
/தூரத்து பள்ளி கட்டிடமொன்றில்
இடிபாடுகிடையில் இறந்து கிடந்தன
இயல் இசை நாடகம் மூன்றும்./
/தூரத்தில் பிணதின்னி கழுகளோடு
பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்தது
என்தேசத்தின் இறையாண்மை/
அருமை மகேஸ்
/அலறியபடி கண் விழித்து
எழுந்தேன் நான்/
அப்படின்னா தூக்கம் போறதுக்கு காரணம் மைனா மட்டும் இல்லை.
வார்த்தை சொல்லும் வலிகளுக்கு மருந்தே இல்லை.
naama poatta comment publish panna kooda time illa.. hmm.. ennamo.. pannungaiyaa..
அது ஒன்னும் இல்லைங்....வீட்டு கணிபொறி-ல வைரஸ். மீண்டும் அதை நிறுவ வேண்டும். அலுவலக வேலையில் தமிழில் தட்டச்சு செய்ய தொடங்கினால் நம்மள குரங்காட்டி மாதிரி பாக்குரணுவ. அதன் கொஞ்சம் தாமதம் வழக்கம் போல்.
வானம்பாடிகள் கூறியது...
"அப்படின்னா தூக்கம் போறதுக்கு காரணம் மைனா மட்டும் இல்லை."
ஆமா. நம்ம மண்டை மயானம் போற வரைக்கும் இருக்கும் போல இந்த கசப்பு.
கருத்துரையிடுக