"உங்களுக்கு இயேசு மேல நம்பிக்கை உண்டா?" என்ற குரல் கேட்டு சாளரத்தின் மேல இருந்த பார்வையை விலக்கி அந்த பெரியவரை பார்த்தேன். என்னைத்தான் கேட்டு கொண்டு இருந்தார். சென்னை-ல் இருந்து திருச்செந்தூர் சென்று கொண்டு இருந்த ரயில் அது. என் மனைவி "சின்ன மைனாவை"* தூங்க வைக்க போராடி கொண்டு இருந்தாள். என்னை பார்த்து இந்த கேள்வி கேட்க பட்டதும் சிரிக்க முற்பட்டாள். கேள்வி கேட்ட பெரியவரை பார்த்தேன். அறுபது வயதுக்கு மேலே இருக்கும் அவர் கையில் பெரிய பைபிள் ஒன்று இருந்தது. பேசும் மன நிலையில் நான் இல்லை.
"இல்லைங்க. நான் கடவுள் மறுப்பு கொள்கையை கடை புடிப்பவன்"
" ஒ!! அப்படியா செய்தி. உங்க மாதிரி ஆட்களைத்தான் இயேசு ராசா முதலில் ரட்சிக்கிறார் தெரியுமா? "
" இவரு ரொம்ப நேரமா இப்படித்தான் எல்லோரையும் கேட்டு தொல்லை பண்ணுகிறார்" என்றாள் என் மனைவி முணுமுணுப்பாக. நான் வெளியே வேடிக்கை பார்க்க போய் இருந்த சமயம் அவர் இது பற்றி எல்லோரிடமும் பேசி இருக்க கூடும் என்று நினைத்து கொண்டேன்.
"தம்பி உங்களைதான் கேக்குறேன் .. அப்படி எல்லாம் இருக்கிறது தப்பு தெரியுமா?"
பெருசுக்கு நேரம் சரி இல்லை. சொந்த செலவில் செய் வினை வைத்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டேன்.
" நம்ம இத பத்தி ரொம்ப நேரம் விவாதம் பண்ண வேண்டி இருக்கு. அப்புறம் நீங்க என்னோட கட்சி மாற வேண்டி இருக்கும்.. சரியா?" என்றேன்.
" இல்ல இயேசு ராஜா என்ன சொல்லுகிறார் என்றால்...."
"நிறுத்துங்க...நான் ரொம்ப கேள்வி கேக்க போறது இல்ல ... ஒரே ஒரு கேள்வி தான்..அதுக்கு மொத பத்தி சொல்லுங்க அப்புறம் பேசலாம்"
"என்ன?"
"நீங்க தமிழ் கிருத்தவர் தானே"
"ஆமாம்"
"இப்போ ஸ்ரீலங்கா -ல நடந்த போரில் ஏகப்பட்ட தமிழ் கிறித்துவர்கள் செத்து போய்டாங்க.. நெறைய தேவாலயம் இடிஞ்சு போச்சு..இன்னும் நிறைய கிருத்துவர்கள் சோத்துக்கு கஷ்ட படுறாங்க...புத்த மதம் இருக்குன்னு ஒரே காரணத்துக்காக சீனாகாரனும் ஜப்பான்காரனும் அவனுக்கு காசும், ஆயுதமும் கொட்டி கொடுத்தானே.. நீங்க உங்க ஆளுங்களுக்கு என்ன செஞ்சீங்க? நீங்களும் உங்க பேராயரும் மூச்சு விடலையே ஏன்..?"
அவரிடம் இருந்து பதிலே இல்லை.
"என்னன்னா அதனால ஒரு பிரயோசனுமும் இல்ல .. அப்படி பேசினா உங்களை தூக்கி ஜெயில்-எ போட்டிருவான். வாடிகன்ல அவங்களை தமிழ் ஆளா பார்த்தான். கிருத்துவனா இல்ல..அத நீங்க புரிஞ்சிக்கணும். முதல உங்களை நம்பி மதம் மாறுன சனத்துக்கு எதாவது பண்ண முடியுமான்னு பாருங்க.. அப்புறம் என்னை மாதிரி ஆளுங்க கிட்ட வரலாம்"
அவர் என்னிடம் பேச விரும்பவில்லை போலும். அவர் பைபிள்-ஐ திறந்து வைத்து கொண்டார். நான் இறங்கும் வரையில் என்னுடைய பார்வையை தவிர்த்தார். இறங்கும்போது இதை பத்தி சிந்திக்குமாறு சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 comments:
/பெருசுக்கு நேரம் சரி இல்லை. சொந்த செலவில் செய் வினை வைத்து கொள்கிறார் என்று நினைத்து கொண்டேன்./
அதானே! யார்ட்ட:))
/வாடிகன்ல அவங்களை தமிழ் ஆளா பார்த்தான். கிருத்துவனா இல்ல../
வாடிகன்ல கிருத்துவனா பார்க்கலை. தமிழ்நாட்டில தமிழனா பார்க்கலை. உலகம் முழுதும் மனுசனா பார்க்கலை.
/வாடிகன்ல அவங்களை தமிழ் ஆளா பார்த்தான். கிருத்துவனா இல்ல../
வாடிகன்ல கிருத்துவனா பார்க்கலை. தமிழ்நாட்டில தமிழனா பார்க்கலை. உலகம் முழுதும் மனுசனா பார்க்கலை...
ஆமாம்.. அதான் உண்மை..
இடுகை நல்லா இருக்கு மைனா..! அத விட உங்க பக்கத்துக்கு நீங்க செலக்ட் பண்ணி இருக்கிற கலரும் எழுத்து கலரும்.. பிரம்மாதம் போங்க..! rmkv காரன் பார்த்தா புது புடவை டிசைன் பண்ணிடுவான்..!
இடுகை நல்லா இருக்கு மைனா..! அத விட உங்க பக்கத்துக்கு நீங்க செலக்ட் பண்ணி இருக்கிற கலரும் எழுத்து கலரும்.. பிரம்மாதம் போங்க..! rmkv காரன் பார்த்தா புது புடவை டிசைன் பண்ணிடுவான்..!
என்ன கொடுமை சார் இது.. அவ்வ்வ்வ்வ்வ்வ் ......எவ்வளவோ பண்ணிடோம் இத பண்ண மாட்டமா?
கருத்துரையிடுக