அனுபவம் புதுமை!!!!!!!
Posted by
Maheswaran Nallasamy
, புதன், 2 செப்டம்பர், 2009 at 3:00 AM, in
சீக்கிரமே வீடு வந்து சேர்ந்துவிட்டேன் அன்று. கொஞ்சம் சந்தோசமாக இருந்தது. சின்ன மைனாவும் என்னோட மனைவியும் ஊரில் இல்லை. "பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா" - என ஜனகராஜ் மாதிரி கத்தாத குறைதான். இனி அந்த அந்த நாளின் எஞ்சிய நேரம் அத்தனையும் எனக்கே எனக்கு. இரண்டு புத்தகங்கள் வாங்கி வைத்து ரொம்ப நாளாக படித்து முடிக்க படாமல் இருந்தன. முடித்த பின் தான் தூங்க வேண்டுமென முடிவு செய்த நேரத்தில் கதவு தட்டபட்டது.
வெளியே வாசலில் இரண்டு பேர் கைகளில் நன்கொடை புத்தம்.
"வணக்கம் நாங்க கணேஷா விழா கொண்டாட போறோம். அன்ன தானத்துக்கு நன்கொடை வேணும்".
"சந்தோசம்.. ஆனா நான் இதுக்கு எல்லாம் பணம் தர பழக்கம் இல்ல"
" சார்.. நாங்க பொய் சொல்லல சார். கணேஷா சிலை கூட இங்கதான் வைக்க போறோம்"
" எல்லாம் சரி. நான் என்னை நம்புற ஆள்"
" புரியலே..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?"
" நான் கடவுளை நம்புற ஆள் இல்லை அய்யா." என்றேன். அவர்கள் என்னை நம்பின மாதிரி தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
"நீங்க நம்பட்டா போகுது. நாங்க நம்புகிறோம். பணம் கொடு" - பேச்சு ஒருமைக்கு மாறி இருந்தது.
"இல்லபா. இதுக்கு எல்லாம் நான் பணம் தராது இல்லை"
"நீ முஸ்லிமா?"
"இல்லை"
"பின்ன ஏன் பணம் தர மாட்டேங்குற.. இப்படி ஒரு பதிலை கேள்வி பட்டதே இல்லை"
"டேய் .. கடவுள் சத்யமா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லடா.. " என கதற வேண்டும் போல இருந்தது. ஒரு வழியாக இவனிடம் இருந்து பணம் வராது என முடிவு பண்ணி இருவரும் கன்னடத்தில் என்னை திட்டியவாறே அடுத்த வீடு நோக்கி நகர ஆரம்பித்தனர்.
சரியாக இரண்டு நாள் கழித்து மாலை என்ன வீடு அருகே தெருவை மறைத்து பந்தல் போட பட்டது. உள்ளே ஒரு பெரிய விநாயகர் சிலை ஒன்று வண்ண விளக்கு அலங்காரத்தில் (உபயம்: எனது வீடு உரிமையாளர்) ஜொலித்து கொண்டு இருந்தது.
பாதையை அடைத்து பந்தல் போட பட்டு இருந்தது. நான் எனது வண்டியை வீட்டுக்கு எடுத்து போக முடியும் என தோன்ற வில்லை. என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த அந்த இரண்டு ஆசாமிகளும் ராஜ போதையில் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் அங்கே இருந்து என்னை முறைப்பதாய் கூட தோன்றியது. வண்டியை ஓரம் போட்டு விட்டு மெல்ல வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். "அம்மாடி ஆத்தாடி என்ன உனக்கு தரயாடி?" போன்ற பக்தி பாடல்களுக்கு நண்டு சுண்டாங்கள் ஆட்டம் போட்டு கொண்டு இருந்தன.
"டண்டனக்க டண்டனக்க டண்டனக்க" என சத்தம் காதை கிழிக்க ஆரம்பித்தது சிறிது நேரத்தில். இப்போது நண்டு சுண்டான்களோடு பெருசுகளும் போதையின் துணையோடு ஆட தொடங்க இருந்தார்கள். எனக்கு அது எங்கவூர் பக்கம் அடிக்கும் சாவு மேளத்தின் தொனியை நினைவுபடுத்தியது. அருளை "ஹோம் டெலிவரி" செய்வதற்காக பிள்ளையார் சிலை ஒரு வண்டியில் வைத்து வீடு வீடாக இழுத்து வரப்பட்டது. எனக்கு ஏனோ தேவை இல்லாமல் யானை-ஐ பற்றிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது. சிரித்து கொண்டே இரவு உணவிற்கான விடுதியை நோக்கி நடக்க தொடங்கினேன். தூறலாக தொடங்கிய மழை சிரித்து நேரத்தில் பெரும் மழையாக அடித்து ஊற்ற ஆரம்பித்தது. தூரத்தில் பிள்ளையார் ஊர்வலம் கலகலத்து போயிருந்தது. எல்லோரும் மறைவிடம் தேடி ஓட, பிள்ளையார் சிலை கலர் கலராக கரைய ஆரம்பித்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 comments:
பிள்ளையார இவனுங்கள விட எந்த நாத்திகனும் கேவலப் படுத்த முடியாது. எழவெடுத்தவனுங்களுக்கு அரசாங்கம் சப்போர்ட் வேற. போலீஸ் தண்டம், ட்ரஃபிக்க நிறுத்தி பெட்ரோல் தண்டம், கடற்கரை நாசம், அத சுத்தம் பண்ண செலவுன்னு. ங்கொய்யாலே, புள்ளையார் வைக்கிறியா. வா வைய்யி. இத கரைக்கிரதுக்கு இவ்வளவு காசாவுது. கட்டுடான்னா தானெ குறைஞ்சிடும்.
அதானே .. ஊரான் காசுல சரக்கு அடிக்க இது ஒரு சாக்கு. சின்ன சின்ன பசங்க கூட இத பார்த்து கெட்டு போறாங்க.
இப்போ களையா இருக்கு. பின்னூட்டம் அதே பக்கத்துல வரா மாதிரி வைங்க. இன்னும் அழகா இருக்கும்.
உங்கள் கருத்தோடு 100இல்லை 1000 மடங்கு ஒத்துப்போவேன். அதே வேளை இது போன்ற தன் மதத்தின் அழுக்குகளை எழுத எந்த மற்ற மதக்காரர்களும் இல்லை(முஸ்லீமை சொல்லவில்லை. ஏன் வம்பு) இதை நினைக்கும் போது இந்த மதம் பித்தவர்களை மதம் பீடித்த யானைக்கு பலியிடவேண்டும் என்ற என்னமே அதிகம்
கருத்துரையிடுக