எப்படியோ பிரிவானோம்
இடி விழுந்த ஓடானோம்
இருபது வயசோட
இரு வேறு திசையானோம்.
தண்ணி இல்லா காட்டுக்கு
தாலி கட்டி நீ போக
வரட்டூறு தாண்டி
வாக்கப்பட்டு நான் போக....
ஒம்புள்ள ஒம்புருசன்
உம்பொழப்பு ஒன்னோட
எம்புள்ள எம்புருசன்
எம்பொழப்பு என்னோட....
---வைரமுத்து(தோழிமார் கதை).
நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டு இருந்தது.சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை-ல் இருந்து மதுரை செல்லும் பேருந்து ஒன்றில் சன்னலோர இருக்கை ஒன்றை எனதாக்கி கொண்டு பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக ஆனபோதும், வண்டி கிளம்புவதற்கான அறிகுறி ஒன்றும் தென்படவில்லை. தூரத்தில் விசும்புகிற குரல் கேட்டு எட்டி பார்த்தேன். ஒரு இளம்பெண் அழுது கொண்டிருக்க, மற்றொருவள் எதையோ சொல்லி அவளை தேற்ற முயன்று கொண்டு இருந்தாள். கைக்குட்டை கொண்டு கண்ணீரை துடைத்து கொண்டு அழுகையை கட்டுப்படுத்த முயற்சிப்பது நன்றாகவே தெரிந்தது. இருவரும் கல்லூரி தோழிகள் எனவும், படிப்பு முடிந்து சொந்த ஊர் திரும்பும் நேரத்தில், பிரிவை நினைத்து அழுவதும், அவர்கள் பேசி கொள்வதில் இருந்து தெரியவந்தது.மீண்டும் சந்திப்போமோ இல்லையோ என்ற நிச்சயமற்ற நிலையில் அந்த பெண்ணால் அழ மட்டுமே முடிந்தது. "அப்புறம் மச்சி பார்க்கலாம்..போன் பண்ணு .." என்று பிரிய முடியாதபடியான நட்பு. அன்று அந்த பெண்ணை ஆறுதல் படுத்தும் விதமாக நான் எழுதிய கவிதை,பின்னொரு நாளில் தோழிமார் கவிதை படித்த போது நினைவுக்கு வந்தது.
எவன் எழுதி வைத்த சட்டமிது
பிரிய நேரிடும் போதெல்லாம்
பிழிய பிழிய அழுவதென ?
கருத்த விழி இரண்டை
கண்ணீரில் நனைப்பவளே
கண்ணீரால் உன் கவலையை
கை குட்டைக்கும் ஏற்றாதே...
இதயமும் துடிப்புமாய்
இருந்த காலம் போயாச்சு
நிகழ் காலம் திரும்ப பழகு
நினைவுகளை நேசிக்க தொடங்கு
நம் இருவருக்குமான நட்பு
கொஞ்சம் வேறுபட்டது
இருவர் மனதிலும்
நன்றாக வேர் விட்டது.
உடலும் உள்ளமும் ஒரு சேர
சோர்ந்து போகும் வேளையெல்லாம்
நான் உன் பெயர் சொல்லி கொள்வேன்
நினைவுகளால் கொஞ்சம் எனக்குள்
நிழல் பரப்பிக் கொள்வேன்.
இருக்கும் விழி இரண்டில்
ஈரபதம் உள்ளவரை
நீங்காத உன் நினைவு -என்
நெஞ்சோரம் தங்குமடி!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
அடேங்கப்பா. அருமை மஹேஸ்.
இது பின்னூட்டமல்ல. ’கை’யறு நிலைதானே சரி மகேஸ்?
ஆஹா பழசெல்லாம் வெளில வருதே.. அசத்துங்க...
இது பின்னூட்டமல்ல. ’கை’யறு நிலைதானே சரி மகேஸ்?
ஆமாம். "கை" யரு நிலைதான் சரி.
ஆஹா பழசெல்லாம் வெளில வருதே.. அசத்துங்க...
என்ன பிரயோசனம் ...உங்களுது ஒண்ணுமே வெளிய வரலையே..
//Maheswaran Nallasamy சொன்னது…
ஆஹா பழசெல்லாம் வெளில வருதே.. அசத்துங்க...
என்ன பிரயோசனம் ...உங்களுது ஒண்ணுமே வெளிய வரலையே..//
அப்டி ஏதாவது இருந்தாதானே.. அவ்வ்வ்வ்..
//இதயமும் துடிப்புமாய்
இருந்த காலம் போயாச்சு
நிகழ் காலம் திரும்ப பழகு
நினைவுகளை நேசிக்க தொடங்கு //
ஆஹா அனுபவம் பேசுகிறது............
Nandri
கருத்துரையிடுக